வண்ண ரோஜாக்கள் மார்க்கெட்டில் குவிப்பு
திருப்பூர்; நாளை (14ம் தேதி) காதலர் தினத்தை முன்னிட்டு, விற்பனைக்காக அதிகளவில் ரோஜா பூக்கள், திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு தருவிக்கப்பட்டு வருகிறது.காதலர் தினம் என்றாலே, ரோஜாக்களுக்கு மவுசு கூடிவிடுகிறது. நாளை (14ம் தேதி) காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு நேற்று, ரோஜா பூ வரத்து அதிகரிக்க துவங்கியது.ஓசூர், பெங்களூரு பகுதிகளில் இருந்து முதல்தரமான பட்டர்ரோஜா, சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் ரோஜாக்கள் விற்பனைக்கு தருவிக்கப்பட்டுள்ளன. 20 ரோஜாக்கள் கொண்ட ஒரு கட்டு, 200 - 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது.ஒரு ரோஜா பூ நேற்று, 15 ரூபாய்க்கு விற்றது. இன்று விற்பனையை பொறுத்த விலை இருக்குமென பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.