காயமடைந்தவர்களுக்கு ஆறுதல்
செங்கப்பள்ளி அருகே அதிவேகமாகச் சென்ற தனியார் பஸ் ரோட்டில் கவிழ்ந்ததில் கல்லுாரி மாணவர் மூவர் பலியாயினர். காயமடைந்தவர்களில் 10 பேர், திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை அமைச்சர் கயல்விழி, மேயர் தினேஷ்குமார் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினர். மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.