உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு 

பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு 

திருப்பூர் : திருப்பூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா நகர் குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் சோளிபாளையம் விரிவாக்க பகுதி சங்கம் ஆகியன சார்பில், பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இந்த குடியிருப்பு பகுதியில், 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகளில், சிறந்த மதிப்பெண் பெற்ற, 11 மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், கேடயம், சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் குளம் காக்கும் அமைப்பு தலைவர் துரை, ஏ.வி.பி., நகர் குடியிருப்போர் நலச் சங்க செயலாளர் வெள்ளிங்கிரி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில், வேலுசாமி, சதீஷ், மகேஷ், பாலமுருகன் முன்னிலை வகித்தனர். மாஸ்டர் பார்த்திபன் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு பேசினார். ஆசிரியர் ரேணுகா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ