மேலும் செய்திகள்
'அடியார்க்கு தொண்டு செய்தால் இறைவனே தொண்டனாவான்'
24-Dec-2024
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.நேற்றை சொற்பொழிவு நிகழ்ச்சியில், சென்னை ஜெயமூர்த்தி பேசியதாவது:கோபம் நம்மை அழித்து விடும். கோபத்தினால் ஏற்படுகின்ற சிந்தனைகள் நடக்கின்ற செயல்கள் அனைத்தும் அழிவைத் தரும்.தெய்வத்தை வழிபாடு செய்வதற்கு கால அளவுகோல் இல்லை. எந்த ஒரு ஜீவனுக்கும் ஏதாவது ஒரு விதத்தில் இடையூறு செய்யாமல் துன்பம் கொடுக்காமல் இருக்கின்றவர்கள் தவம் புரிந்தவர்களுக்கு சமமானவர்.நல்ல நண்பர்களை பெற்றவர்கள் எல்லா வகையிலும் பாக்கியசாலிகள். அனைத்திலும் உயர்ந்தது உண்மையான நட்பாக பழகுவது. பசித்தவருக்கு அன்னத்தை தானம் செய்ய வேண்டும். பசியென வந்தவரிடம் பிறப்பின் வரலாற்றை கேட்கக்கூடாது. ஒருவன் அளவிட முடியாத கஷ்டத்திலும் துயரத்திலும் தவிக்கும்போது, அந்த நேரத்தில் நம்மை உயர்த்தி பேசக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
24-Dec-2024