உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மக்காச்சோள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்

மக்காச்சோள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்

திருப்பூர்; திருப்பூர் மற்றும் கோவை தெற்கு மாவட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கூட்டுறவு அணி சார்பில், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:மக்காக்சோளத்தில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் தென்படுகிறது. ஒரு பக்கம் மழை, மறுபக்கம் பனி என பல்வேறு காரணங்களால், மக்காச் சோள மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடும் உர விலை, தொழிலாளர் பற்றாக்குறை, மருந்துகள் விலை உயர்வு போன்ற காரணங்களால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.நுாறு நாள் திட்டப் பணியாளர்களை விவசாய பணிக்கு பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு ஏற்கவில்லை. விவசாயிகளால் வாங்கிய பயிர்க்கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. வங்கிக் கடனுக்கு வட்டி கூட செலுத்த முடியாத நிலையுள்ளது. தமிழக அரசு, மக்காச்சோளம் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு, இழப்பீடு வழங்க வேண்டும். பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.மத்திய அரசு, மக்காச்சோளத்துக்கு, ஒரு சதவீதம் செஸ் வரி விதிப்பதால், மக்காச்சோளம் விற்பனை கடுமையாக பாதிக்கும். செஸ் வரியை திரும்பப் பெற, மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.பயிர்க்காப்பீடுக்கான இழப்பீடு தொகையையும், காப்பீடு நிறுவனங்களிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ