மேலும் செய்திகள்
துாய்மை பணியாளர்கள் போராட்டம்
20-Dec-2024
திருப்பூர்; திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு முகாமில், பொதுமக்களிடமிருந்து மொத்தம் 453 மனுக்கள் பெறப்பட்டன. கலெக்டர் கிறிஸ்துராஜ், டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் உள்ளிட்டோர், மக்களிடமிருந்து மனுக்களை பெற்று, நடவடிக்கை எடுப்பதற்காக துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கினர்.தமிழ்நாடு இளைஞர் முன்னணியினர்:
திருப்பூரில் பள்ளி, கல்லுாரிகளுக்கு அருகே, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை தேவை.அணைப்பாளையம் ஊராட்சி துணை தலைவர் நந்தகுமார் மற்றும் பொதுமக்கள்:ஊத்துக்குளி ஒன்றியம் அணைப்பாளையத்தில் அரசு கட்டடம் ஒன்று நல்ல நிலையில் பயன்பாடு இன்றி உள்ளது. கட்டடத்தில் மின் இணைப்பு, கடந்த 2022ல் துண்டிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பை புதுப்பித்து, அந்த கட்டடத்தில் நிரந்தர கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.எஸ்.டி.பி.ஐ., கட்சியினர்:
திருப்பூர், பெரியதோட்டம், சத்தியா நகரில், நொய்யல் ஆற்றோர குடியிருப்பு பகுதி மக்கள், தனித்தனி கழிப்பிடங்கள் கட்டியுள்ளனர். இதனால், பொது கழிப்பிடங்கள் பயன்பாடு இன்றி, சிதிலமடைந்துள்ளன. போதை ஆசாமிகளின் புகலிடமாக மாறிவருகிறது. இவற்றை அகற்றிவிட்டு, அங்கன்வாடி மைய கட்டடம் கட்டித்தரவேண்டும்.உடுமலை அரசு மருத்துவமனை ஒப்பந்த துாய்மைப்பணியாளர்கள்:
உடுமலை அரசு மருத்துவமனையில், 45 துாய்மை பணியாளர் மற்றும் டெக்னீஷியன்கள் பணிபுரிகிறோம். 12 ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் துாய்மை பணியாளர்களுக்கு 610 ரூபாய் தினக்கூலி வழங்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் ஒப்பந்த நிறுவனம், கூலி உயர்வு வழங்காமல் முறைகேடு செய்கிறது. மாதம் 18,300 ரூபாய் சம்பளம் வழங்கவேண்டிய நிலையில், ஒன்பதாயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. துாய்மை பணியாளர்களுக்கு கலெக்டர் நிர்ணயித்த சம்பள உயர்வு வழங்கவேண்டும். முறைகேடுகள் செய்துவரும் ஒப்பந்த நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்யவேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, மருத்துவமனையில் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறோம்.இதேபோல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு அளித்தனர்.----கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்த ஊத்துக்குளி ஒன்றியம், அணைப்பாளையம் பொதுமக்கள்.உடுமலை அரசு மருத்துவமனை ஒப்பந்த துாய்மைப்பணியாளர்கள்.
சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை, கலெக்டரிடம் அளித்த மனு:பல்லடம், அண்ணா பஸ் ஸ்டாண்டில், நவீன கட்டண கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2018, ஏப்ரல் முதல் 2021, மார்ச் மாதம் வரை, கழிப்பிட குத்தகை மூலம், நகராட்சிக்கு ஆண்டுக்கு 15.75 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துவந்தது.கடந்த மூன்று ஆண்டுகளாக யாரையும் ஏலம் எடுக்கவிடாமல் நகராட்சி நிர்வாகமே கட்டணம் வசூலித்துவந்தது. தி.மு.க.,வினரே கட்டண கழிப்பிடத்தை நடத்தி பணம் சம்பாதித்துள்ளனர். குத்தகைக்கு விட்டிருந்தால், மூன்று ஆண்டுகளுக்கு, 42 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும். நகராட்சி நிர்வாகமே நடத்தியதால், 33.75 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இழப்பு ஏற்படுத்தியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க, ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவுக்கு உத்தரவிடவேண்டும்.
20-Dec-2024