உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாசனம் முடிந்த மடைகளுக்கு கான்கிரீட் பூச்சு பூசும் பணி

பாசனம் முடிந்த மடைகளுக்கு கான்கிரீட் பூச்சு பூசும் பணி

பொங்கலுார்; நாளை, திருமூர்த்தி அணையில் இருந்து நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. ஒரு மண்டலத்திற்கு பாசனம் நடக்கும் பொழுது மீதமுள்ள மூன்று மண்டல பகுதிகள் அடைக்கப்பட்டிருக்கும். பொதுப்பணித்துறையினர் பாசனம் நடக்காத வாய்க்கால்களை ஷட்டர் போட்டு அடைப்பதுடன் அதற்கு மேலாக கான்கிரீட் பூச்சு போட்டு அடைக்கின்றனர். பல ஆண்டுகளாக இந்த இரட்டை அடுக்கு பாதுகாப்பு முறை கடைப்பிடிக்கப்படுகிறது. ஷட்டரில் நீர் கசிவு கூட ஏற்பட வாய்ப்பு இல்லை. வாய்க்கால் வழியாக தண்ணீர் திருட முடியாது. ஒரு சிலர் ஆங்காங்கே பைப் போட்டு தண்ணீரை உறிஞ்சி எடுப்பது உண்டு. அதனையும் அதிகாரிகள் கண்டுபிடித்து விட்டால் அவர்களின் மீது வழக்கு பதிவு செய்து, மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை