உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

உடுமலை; உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில், 10 மற்றும் 12ம் வகுப்பு, தேர்வில் பாடவாரியாக சிறந்த மதிப்பெண் மற்றும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. எஸ்.கே.பி., கல்விக்கழகத்தின் இணைச்செயலாளர் கோபாலன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சுப்ரமணியம், உதவித்தலைமை ஆசிரியர் சேஷநாராயணன் முன்னிலை வகித்தனர். பழநி சுப்ரமணியா கலை அறிவில் கல்லுாரி நிறுவனர் ஸ்வேதா, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, பாராட்டினார். விருகல்பட்டி அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜவகர், வக்கீல் கண்ணன், ஆசிரியர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவர்கள் உயர் மதிப்பெண் பெற உழைத்த ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி