மேலும் செய்திகள்
தேசிய தடகள போட்டிக்கு செல்லும் தேனி மாணவர்கள்
03-Jan-2025
பல்லடம், ; மதுரையில், ஜன., 3, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில், மாநில அளவிலான மூத்தோர் தடகளப் போட்டிகள் நடந்தன. பல்லடத்தில் இருந்து, 15 பேர் இப்போட்டியில் பங்கேற்றனர். இதில், 7 பேர் போட்டிகளில் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.இவர்களுக்கு, பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. பி.டி.ஏ., தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் திருமூர்த்தி வரவேற்றார். அறம் அறக்கட்டளை நிர்வாகிகள் கார்த்திகேயன், மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற பத்மாவதி, சதீஷ்குமார், பிரகாஷ், தாரணி திவ்யா, பூங்கொடி, சுரேஷ் மற்றும் சித்ரா ஆகியோருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.
03-Jan-2025