மேலும் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு ஹாக்கி பயிற்சி முகாம்
28-Apr-2025
உடுமலை; திருப்பூர் மாவட்ட ஹாக்கி அணிக்கு தேர்வான, பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் சார்பில், வேலுாரில் வரும், 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை மாநில அளவில், சப்-ஜூனியர் பிரிவு மாணவர்களுக்கான ஹாக்கி போட்டி நடக்கிறது.இப்போட்டியில் விளையாடுவதற்கு பல்வேறு மாவட்டங்களில், மாவட்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அணித்தேர்வு மாவட்ட அளவில் நடந்தது.இதில், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் தருண்ராஜ், ேஹமபிரசாத், சித்தார்த்தன், சஞ்சய்குமார், சபரிநாதன் உள்ளிட்ட மாணவர்கள் மாவட்ட அணிக்கு தேர்வாகியுள்ளனர்.மாநில அளவிலான போட்டியில் இந்த மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் பாபு, உடற்கல்வி ஆசிரியர்கள் செந்தில்குமாரவேல், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவினர் பாராட்டு தெரிவித்தனர்.
28-Apr-2025