உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உயிரிழந்தோர் குடும்பத்துக்கு காங்., கட்சியினர் ஆறுதல்

உயிரிழந்தோர் குடும்பத்துக்கு காங்., கட்சியினர் ஆறுதல்

திருப்பூர்: திருப்பூர் அருஙேக கரைப்புதுார், தனியார் சாய ஆலையில், கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட மூன்று தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர்.பலியான தொழிலாளர் குடும்பங்களுக்கு நிறுவனம் தலா 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது.இந்நிலையில், காங்., தேசிய செயலாளர் கோபிநாத் பழநியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று உயிரிழந்த குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும், மாநில தலைவருடன் தொடர்பு கொண்டு, தமிழக அரசு வழங்கும் நிவாரணத்தைப் பெற்றுத் தரவும் வேண்டுகோள் விடுத்தனர்.கோபிநாத் பழநியப்பன் கூறுகையில், ''எவ்வளவு இழப்பீடு வழங்கினாலும் பறி போன உயிர்கள் திரும்ப வராது. இது போன்ற பணிகளில் ஈடுபடுவோர் உரிய பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும்.நிறுவனங்களும், உரிய விதிமுறைகளைப் பின்பற்றி தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை