உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கட்டுமான பொருள் கண்காட்சி: பில்ட் எக்ஸ்போ கோலாகல துவக்கம்

கட்டுமான பொருள் கண்காட்சி: பில்ட் எக்ஸ்போ கோலாகல துவக்கம்

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட கட்டட பொறியாளர் சங்கம் சார்பில், 'பில்ட் எக்ஸ்போ 2025' கண்காட்சி திருப்பூரில் நேற்று துவங்கியது.நான்கு நாள் நடைபெறும் இக்கண்காட்சியில் கட்டுமானத் துறை சார்ந்த நிறுவனங்கள், 160 அரங்குகளில், தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி உள்ளனர்.திருப்பூர், காங்கயம் ரோடு, காயத்ரி மஹாலில், திருப்பூர் மாவட்ட கட்டட பொறியாளர் சங்கம் சார்பில் நடத்தப்படும், கட்டுமானப் பொருள் கண்காட்சி நேற்று துவங்கியது.கண்காட்சியை மேயர் தினேஷ்குமார் துவக்கி வைத்து பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக கட்டட கலை நிபுணர் உமாசங்கர், கே.ஆர்.ஜி., அன் கோ நிறுவனர் ராஜகோபால், லீபுளு நிறுவனர் பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முன்னதாக, துவக்க விழாவுக்கு திருப்பூர் மாவட்ட கட்டட பொறியாளர் சங்க தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். செயலாளர் ராஜாகுமார், பொருளாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். கண்காட்சி குழு தலைவர் குழந்தை குமார் வரவேற்றார்.கண்காட்சி செயலாளர் ஜெகதீஸ்வரன் கண்காட்சி அரங்குகள் குறித்து விளக்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் திருமலைசாமி, குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கண்காட்சி மலரை மேயர் வெளியிட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து கண்காட்சியில் இடம் பெற்றுள்ள அரங்குகளை முக்கிய பிரமுகர்கள் பார்வையிட்டனர்.

4 நாள் கண்காட்சி

நேற்று துவங்கிய இக்கண்காட்சி வரும், 14ம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை அரங்குகளை பார்வை யிடலாம். அனுமதிஇலவசம். குழந்தைகள் பிளே ஜோன் அமைக்கப்பட்டுள்ளது.தினமும் மாலை அதிர்ஷ்ட குலுக்கல் நடத்தி வெற்றி பெறுவோருக்கு பரிசளிக்கப்படும். மேலும் இலவச மருத்துவ பரிசோதனை, ேஹாமியோபதி, யோகா மற்றும் நேச்சுரோபதி ஆலோசனைகள் வழங்கப்படும்.கண்காட்சியில், 160 நிறுவனங்கள் அரங்கு அமைத்துள்ளன. கட்டடங்களுக்கு தேவையான இண்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் அனைத்து பொருட்களின் உற்பத்தி, விற்பனையாளர்கள் ஸ்டால் அமைத்துள்ளனர்.நவீன கட்டுமான பொருள், ஓவியங்கள், வர்ண, அலங்கார விளக்கு, மர மற்றும் ஐம்பொன் கலை பொருட்கள், அலங்கார செடி, பர்னிச்சர், சமையலறை, குளியலறை, தீ தடுப்பு கருவிகள், கண்காணிப்பு, பாதுகாப்பு உபகரணங்கள், டைல்ஸ், மார்பிள், கிரானைட், எலக்ட்ரிக்கல் பொருள், 'ஏசி' கூலர் வகைகள் உள்ளிட்ட கட்டடங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களுக்கான ஸ்டால்கள் உள்ளன.கண்காட்சியின் துவக்க நாளான நேற்று ஏராளமான பார்வையாளர்கள் ஆர்வத்துடன் அரங்குகளைப் பார்வையிட்டு, வர்த்தக விசாரணை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை