உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநகராட்சியில் பணிகள் அதிகாரிகள் ஆலோசனை

மாநகராட்சியில் பணிகள் அதிகாரிகள் ஆலோசனை

திருப்பூர்; தமிழகம் முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து, நகராட்சி நிர்வாக துறை இயக்குநர் சிவராசு தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடந்தது.காணொலி காட்சி வாயிலாக அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்திலிருந்து காணொலி வாயிலாக கமிஷனர் ராமமூர்த்தி, துணை கமிஷனர்கள், முதன்மை பொறியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.மாநகராட்சி பகுதியில் தற்போது நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் நிலவரம் குறித்து விளக்கப்பட்டது.தற்போது நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள், ரோடு விரிவாக்கம் மற்றும் சீரமைப்பு பணிகள் குறித்து விளக்கப்பட்டது.பல்வேறு திட்டங்களில் தலைப்பு வாரியாக பணிகளுக்கு பெறப்பட்ட நிதி விவரம்; நிறைவுற்ற பணிகளுக்கான தொகைகள் வழங்குதல்; திட்ட மதிப்பீடு மற்றும் பெற்ற நிதி அளவு ஒப்பீடு உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.இயக்குநர் அலுவலகத்துடனான காணொலி காட்சி கூட்டத்துக்கு முன்னதாக, மாநகராட்சி மைய அலுவலகத்தில், கமிஷனர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் மாநகராட்சி அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !