உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொடர்ச்சியான சாரல் மழை: இயல்பு வாழ்க்கை மந்தம்

தொடர்ச்சியான சாரல் மழை: இயல்பு வாழ்க்கை மந்தம்

திருப்பூர்: திருப்பூரில் நேற்று துாவானமாக துாறியபடி இருந்தது. தமிழகத்தில் தற்போது வட கிழக்கு பருவ மழை துவங்கியுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் கடுமையாக பெய்த மழை, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் சற்று குறைவாகவே காணப்பட்டது. கடந்த வாரம் சில நாட்கள் தொடர்ந்து திருப்பூர் பகுதியில் மாலை மற்றும் இரவு நேரத்தில் மழை பெய்தது. இதனால், கடைசி நேர தீபாவளி விற்பனையில் கூட சிறிதளவு தேக்கம் காணப்பட்டது. இருப்பினும் ஞாயிறு மற்றும் திங்கள் இரு நாட்களும் மழை சற்று இடைவெளி விட்டது. இதனால், தீபாவளி கொண்டாட்டம் எந்த வகையிலும் தடைபடாமல் கொண்டாட்டம் தொடர்ந்தது. இரு நாட்களும் பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட போதும், மழை பெய்யவில்லை. இந்நிலையில் நேற்று காலை முதலே திருப்பூர் பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. தொடர்ந்து நேற்று மாலை வரை சிறிது நேரம் இடைவெளி விட்டு விட்டு, மழை துாறியபடி இருந்தது. மழை பெய்த போது ரோட்டில் நடந்து சென்ற பொதுமக்கள் குடைகளைப் பிடித்துக் கொண்டு மழையில் நனையாமல் நடந்த வண்ணம் இருந்தனர். இந்த துாறல் மழை நேற்று மாலை வரை தொடர்ந்து பெய்தபடி இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ