மேலும் செய்திகள்
ராசிபுரத்தில் துாறல் மழை
23-Oct-2024
திருப்பூர்: திருப்பூர் நகர பகுதிகளில், கடந்த நான்கு நாட்களாக வெயில் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டது. நேற்று அதிகாலை நேரம், நகரம் முழுவதும் பரவலாக துாறல் மழை பெய்தது. காலையில் மழை நின்றபோதும், வானம் மேகமூட்டத்துடனேயே காணப்பட்டது. மதிய நேரம், கருமே கங்கள் திரண்டு நின்றன.மாலை, 4:20 மணியளவில், மழை பெய்யத்துவங்கியது. 45 நிமிடங்கள் வரை பரவலாக பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் ஓடியது. திருப்பூர் - தாரபுரம் ரோட்டில், அரசு மருத்துவமனை முதல் கோவில் வழி வரை, ரோட்டில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளி மாணவ, மாணவியர் மழையில் நனைந்தபடியே வீடுதிரும்பினர். குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
23-Oct-2024