உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கூட்டுறவு மேலாண்மை பயிற்சி ஜூலை 20 வரை அவகாசம்

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி ஜூலை 20 வரை அவகாசம்

திருப்பூர்; திருப்பூர் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் பிரபு அறிக்கை:தாராபுரத்திலுள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2025 - 26ம் ஆண்டுக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறப்பட்டு வருகிறது. பயிற்சியில் சேர விரும்புவோர், www.tncu.tn.gov.inஎன்கிற இணையதளத்தில், விண்ணப்பங்களை வரும் ஜூலை 20ம் தேதி மாலை, 5:00 மணி வரை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி ஓராண்டு அளிக்கப்படும். இப்பயிற்சி இரண்டு பருவங்களை கொண்டது. குறைந்தபட்சம் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், மூன்று ஆண்டுகள் பட்டயப்படிப்பு மற்றும் பட்டய படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.வரும் ஜூலை 1ம் தேதி, 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் விவரங்களுக்கு, 04258 220640 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை