கூட்டுறவு வார விழா
பல்லடம்; பல்லடம் அருகே, எலவந்தி கிராமத்தில் 71வது கூட்டுறவு வார விழா நேற்று கொண்டாடப்பட்டது.கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். திருப்பூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பழனிசாமி முன்னிலை வகித்தார். எலவந்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கு உட்பட்ட ரேஷன் கடையில் உள்ள கார்டுதாரர்களுக்கு, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், சேமிப்பு கணக்கு துவங்கியதற்கான புத்தகங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, பல்லடம் கிளையில் நடந்த வைப்புகள் சேமிப்பு முகாம் மூலம் திரட்டப்பட்ட வைப்பு கணக்குகளுக்கு ரசீதுகள் வழங்கப்பட்டன.