மேலும் செய்திகள்
இ - நாம் ஏலத்திற்கு கொப்பரை வரத்து அதிகரிப்பு
23-Nov-2024
உடுமலை; உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், 'இ-நாம்' திட்டத்தின் கீழ் வாரந்தோறும் கொப்பரை ஏலம் நடத்தப்படுகிறது. நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில், 4,750 கிலோ கொப்பரை மறைமுக ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டது.முதல் தரம் கிலோ ரூ. 125.66 முதல் ரூ. 130.76 வரையும், இரண்டாம் தரம் ரூ. 103.49 முதல் ரூ. 120.99 வரையும், இ - நாம் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது. ஏலம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு, விற்பனை கூட கண்காணிப்பாளரை, 94439-62834 என்ற மொபைல் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
23-Nov-2024