மே தின விடுமுறையால் கொப்பரை ஏல தேதி மாற்றம்
உடுமலை; உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், வரும் 2ம் தேதி கொப்பரை மற்றும் விவசாய விளை பொருட்கள் ஏலம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடந்து வருகிறது. உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து, ஏராளமான விவசாயிகள் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.வரும் வியாழக்கிழமை, மே 1ம் தேதி, தொழிலாளர் தினம், அரசு விடுமுறை என்பதால், வரும், 2ம் தேதி, இ-நாம் திட்ட ஏலம் நடைபெறும், என அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் தர்மராஜ், ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:மே 1ம் தேதி, வியாழக்கிழமை அரசு விடுமுறை என்பதால், இ-நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம், வரும், 2ம் தேதி நடக்க உள்ளது. விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இடைத்தரகர்கள் இல்லாமல், விவசாய விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதோடு, கொள்முதல் செய்யப்படும் தொகை உடனடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.எனவே, விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 94439 62834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, தெரிவித்தனர்.