உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொப்பரை: விவசாயிகளுக்கு முழு பலன் கிடைக்குமா?

கொப்பரை: விவசாயிகளுக்கு முழு பலன் கிடைக்குமா?

- நமது நிருபர் -கொப்பரைக்கான ஆதார விலையை ஆண்டுதோறும் மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது. இந்தாண்டு, சாதாரண கொப்பரை விலை, கிலோ, 111.60 ரூபாய், முழு கொப்பரை 120 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 2025ம் ஆண்டுக்கான ஆதார விலையாக, சாதாரண கொப்பரைக்கு குவின்டாலுக்கு, 11,582 ரூபாய், முழு கொப்பரைக்கு 12,100 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சாதாரண கொப்பரைக்கான கொள்முதல் விலை, கிலோ, 115.82 ரூபாய்; முழு கொப்பரைக்கான ஆதார விலை, 121 ரூபாய் கிடைக்கும். கொப்பரைக்கான விலை மூலம் விவசாயிகள் முழுமையான லாபம் பெற, இடைத்தரகர் தலையீடு தவிர்க்கப்பட வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.10 ஆண்டில் 121 சதவீத வளர்ச்சிசுப்ரமணியம், ஒருங்கிணைப்பாளர் களஞ்சியம் விவசாயிகள் சங்கம்விவசாயிகளுக்கான நிரந்தர வருமானமாக தென்னை சாகுபடி மாறியிருக்கிறது. கடந்த, 3 ஆண்டுகளாக வறட்சி, நோய் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்; தற்போது, தேங்காய்க்கான தேவை அதிகரிக்க துவங்கியிருக்கிறது; மத்திய அரசு, கொப்பரைக்கான ஆதார விலையை உயர்த்தியிருப்பது, வரவேற்கத்தக்கது. கடந்த, 2014ல், சாதாரண கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலை, குவின்டாலுக்கு, 5,250 ரூபாயாக இருந்தது; தற்போது, 11,582 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது; இது, 121 சதவீத வளர்ச்சி. முழு கொப்பரை விலை, 2014ல், குவின்டாலுக்கு, 5,500 ரூபாயாக இருந்தது; தற்போது, 12, 100 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது; இது, 120 சதவீத வளர்ச்சி. இதன் வாயிலாக தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும்.வெளிச்சந்தை விலை அதிகம்பிரபுராஜா, மாநில தலைவர் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம்மத்திய அரசின், கொப்பரைக்கான ஆதார விலை உயர்வு வரவேற்கத்தக்கது; மத்திய அரசு விலை நிர்ணயம் செய்யும் போதெல்லாம், விவசாயிகளை ஈர்ப்பதற்காக தனியார் சந்தையிலும், கொப்பரைக்கான விலை உயரும்; அதன்படி, தற்போது, தனியார் சந்தையில் கிலோவுக்கு, 140 ரூபாய் கொள்முதல் விலை வழங்கப்படுகிறது; மத்திய அரசு நிர்ணயித்த தொகை, 115.82 ரூபாய். தனியாரை விட அரசின் கொள்முதல் விலை குறைவு என்ற போதிலும், தேங்காய் விலை சரியும் போது, இது விவசாயிகளுக்கு பலன் தரும். பெரும்பாலும் வியாபாரிகள் தான், விவசாயிகளின் பெயரில் கொப்பரை விற்பனையில் ஈடுபடுகின்றனர்; விவசாயிகளுக்கு செல்ல வேண்டிய தொகையில், கணிசமான தொகையை அவர்கள் எடுத்துக் கொள்கின்றனர். இடைத்தரகர் தலையீடால், ஆதார விலையின் முழு பலன், விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. இதை தவிர்க்க, கேரளா போன்று, கொள்முதல் செய்யப்படும் கொப்பரையை தேங்காய் எண்ணெயாக மாற்றி, ரேஷன் கடைகளில் விற்பனை செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ