தெளிப்பு நீரில் கொத்தமல்லி; விவசாயிகள் புதுமுயற்சி
உடுமலை; உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், தென்னையில் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும், கொத்தமல்லி சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, தெளிப்பு நீர் பாசன முறையை பின்பற்றி சாகுபடி செய்யத் துவங்கியுள்ளனர். வரும் சீசனில் விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் சாகுபடி பரப்பையும் அதிகரித்து உள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'முகூர்த்த சீசனையொட்டி, அரை கிலோ கொண்ட கட்டு, 60 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த இரு நாட்களாக விலை குறைந்து கட்டு, 30 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். தெளிப்பு நீர் பாசன முறையை பின்பற்றுவதால், நீரை சிக்கனப்படுத்த முடிகிறது. வரும் சீசனில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது,' என்றனர்.