உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநகராட்சி பள்ளி மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு

மாநகராட்சி பள்ளி மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு

திருப்பூர்: மாவட்ட தடகளம், குழு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று, மாநில போட்டிக்கு தேர்வாகிய, மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பள்ளிகல்வித்துறை நடத்திய மாவட்ட தனிநபர், குழு விளையாட்டு போட்டியில் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி மாணவர்கள் பலர் பங்கேற்றனர். 19 வயது பிரிவு கூடைப்பந்து போட்டியில், இப்பள்ளி அணி முதலிடம் பெற்றது. இந்த அணி திருவண்ணாமலையில் நடக்கும் மாநில போட்டிக்கு செல்ல உள்ளது. மாணவர் தீபக்ராஜ் குண்டு எறிதல் போட்டியிலும், அஜய் நீளம் தாண்டுதல் போட்டியிலும் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். மாவட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர், உடற்கல்வி இயக்குனர் நடராஜ், உடற்கல்வி ஆசிரியர்கள் சசிகுமார், புஷ்பராஜ் உள்ளிட்டோரை, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார், பள்ளி தலைமை ஆசிரியர் கர்னல் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை