மேலும் செய்திகள்
625 மூட்டை பருத்திரூ.13 லட்சத்துக்கு ஏலம்
08-Apr-2025
அவிநாசி; அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை ஏல சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.இதில், விவசாயிகள் மொத்தம், 464 மூட்டைகளில் பருத்தி கொண்டு வந்திருந்தனர். அதில்,ஆர்.சி.ஹெச்., ரகம் அதிகபட்சமாக, 8,209 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக, 7,500 ரூபாய்க்கும், கொட்டு ரகம் குறைந்தபட்சமாக, 2 ஆயிரம் ரூபாய்க்கும், அதிகபட்சமாக 3 ஆயிரம் ரூபாய்க்கும் விற்றது.இந்த வார ஏலத்தில், மொத்தம், 12.59 மெ., டன் பருத்தி, 8 லட்சத்து, 63 ஆயிரத்து, 965 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
08-Apr-2025