தாராபுரம் கல்லுாரியில் 2ம் தேதி கவுன்சிலிங்
தாராபுரம் : தாராபுரம் அரசு கல்லுாரியில் ஜூன் 2ல் கவுன்சிலிங் துவங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.தாராபுரம் அரசு கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) புஷ்பலதா அறிக்கை:பி.ஏ., (தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம்), பி.காம்., (வணிகவியல்), பி.எஸ்.சி., வேதியியல், கணிதவியல், கணிணி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகள், 280 இடங்கள் உள்ளது. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களின் தரவரிசைப்பட்டியல் கல்லுாரியில் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.நாளை (ஜூன் 2ம் தேதி) காலை 9:30க்கு விளையாட்டு வீரர், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், தேசிய மாணவர் படை உள்ளிட்டோருக்கான சிறப்பு கவுன்சிலிங் நடக்கும். முதல் கட்ட கவுன்சிலிங் வரும், 4ம் தேதி துவங்குகிறது; பி.எஸ்.சி., வேதியியல், கணிதவியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுக்கு மாணவர் பங்கேற்கலாம்.வணிகவியல் பாடப்பிரிவு, பி.ஏ., தமிழ், மற்றும் இலக்கிய பிரிவு பாட கவுன்சிலிங் 5ம் தேதி துவங்கும். கவுன்சிலிங் வரும் போது மதிப்பெண், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் நகல், இணைய வழியில் விண்ணப்பித்த நகல், பத்து பாஸ்போர்ட் போட்டோ, வங்கி கணக்கு புத்தக நகல் உள்ளிட்டவற்றை கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவிநாசியில்...
அவிநாசி அரசு கலைக்கல்லுாரி கல்லுாரி நிர்வாகத்தினர் கூறியதாவது:நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்கவுள்ளது. வரும், 3ம் தேதி, சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.பி.காம்., மற்றும் பி.காம்., பன்னாட்டு வணிகம் மற்றும் வணிக நிர்வாகம் பாடப்பிரிவுக்கான கவுன்சிலிங், வரும், 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடத்தப்பட இருக்கிறது.பி.எஸ்.சி., வேதியியல், கம்ப்யூட்டர் அறிவியல் மற்றும் பி.சி.ஏ., பாடப்பிரிவுக்கான கலந்தாய்வு, வரும், 9 மற்றும், 10 ஆகிய தேதிகளில் நடத்தப்படுகிறது. பி.ஏ., ஆங்கிலம் மற்றும் பொருளியல் கலந்தாய்வு, வரும், 11 மற்றும், 12 ஆகிய தேதிகளில் நடத்தப்பட இருக்கிறது.தர வரிசை பட்டியல் படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, மொபைல் போன் மற்றும் இ-மெயில் வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும். தர வரிசை பட்டியலை, www.avinashigasc.inஎன்ற கல்லுாரி இணைய தளம் வாயிலாக, அறிந்துக் கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.