நாட்டு வெடிவிபத்து பாதிப்பு; இழப்பீடு கோரி ஆர்ப்பாட்டம்
அனுப்பர்பாளையம் : திருப்பூர், பி.என்., ரோடு, பூலுவபட்டியில் உள்ள ஒரு வீட்டில் முறைகேடாக நாட்டு வெடி தயாரித்த போது, ஏற்பட்ட வெடி விபத்தில் நான்கு பேர் உயிழந்தனர். 40 வீடுகள் சேதமடைந்தன.உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில், நேற்று பாண்டியன் நகர் பஸ் ஸ்டாப் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருப்பூர் வடக்கு தொகுதி தலைவர் முகமது அலி ஜின்னா தலைமை வகித்தார்.வடக்கு மாவட்ட தலைவர் பாபு, மாநிலச் செயலாளர் அபுபக்கர் சித்திக், ஆகியோர் பேசினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித இழப்பீடும் வழங்கவில்லை. முறையான விசாரணை மேற்கொண்டு பாதிப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில், உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களும் பங்கேற்றனர்.