மேலும் செய்திகள்
மே 24,25ல் மாநில கபடி போட்டி
23-May-2025
திருப்பூர் : கோவில்வழி அடுத்த அமராவதிபாளையம் கால்நடைச் சந்தையில் நேற்று கன்றுக்குட்டி, 3,000 - 4,000 ரூபாய், காளை, 28 ஆயிரம் - 31 ஆயிரம், எருமை, 20,500 - 24 ஆயிரம், மாடு 30 ஆயிரம் - 32 ஆயிரம் ரூபாய் என விற்றது. நடப்பு ஆண்டு, மாடு வரத்து, 850 - 950 என்ற நிலையே இருந்து வந்தது; கடந்த வாரம், 1,051 மாடுகள் வந்தன.இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக, நேற்று 1,100 கால்நடைகள் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. நேற்று 2.10 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக சந்தை ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.
23-May-2025