உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கடைக்குள் புகுந்த கிரேன்

கடைக்குள் புகுந்த கிரேன்

பல்லடம்; பல்லடம், -தாராபுரம் ரோட்டில் செயல்பட்டு வரும் சைசிங் நிறுவனம் ஒன்றுக்கு இயந்திரம் பொருத்துவதற்காக, நேற்று காலை, அவிநாசிபாளையத்தில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டது. பல்லடம், -திருச்சி ரோட்டில் இருந்து, தாராபுரம் ரோட்டில் திரும்பியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கிரேன், ரோட்டோரத்தில் இருந்த பாத்திரக்கடை மற்றும் ஒர்க் ஷாப்புக்குள் புகுந்தது. கடைகளின் முன்புற மேற்கூரை மற்றும் பொருட்கள் சேதமாகின. அப்பகுதியில் யாரும் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மதுரையை சேர்ந்த கிரேன் டிரைவர் ஜெயக்குமார் என்பவரிடம் பல்லடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ