வாசகர்கள் கருத்துகள் ( 1 )
there is no provision for registration in given website. the mobile number they shared also incoming blocked one. so there is no use of this news.
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், 14, 16 மற்றும், 19 வயதுக்கு உட்பட்ட மாவட்ட கிரிக்கெட் அணித்தேர்வு அணைப்புதுார், டீ பப்ளிக் பள்ளியில் வரும், 28ம் தேதி முதல், 30ம் தேதி வரை நடக்கிறது. இதில், தகுதியுடைய ஆண்கள், பெண்கள் இருபாலரும் பங்கேற்கலாம்.கடந்த, 2011 செப்., 1ம் தேதி பிறந்தவர்கள், 14 வயது பிரிவிலும், 2009 செப்., 1ம் தேதி அன்று, 2006 செப்., 1ம் தேதி அன்று அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள் முறையே, 16 மற்றும், 19 வயதுக்கான அணிக்கு விண்ணப்பிக்கலாம். 2013 ஆக., 31ம் தேதிக்கு முன் பிறந்த பெண்கள், பெண்கள் அணிக்கு விண்ணப்பிக்கலாம். 14, 16 மற்றும், 19 வயது தேர்வு முறையே, வரும், 28, 29 மற்றும், 30 ம் தேதி நடக்கிறது; பெண்கள் அணிக்கான தேர்வு வரும், 30 ம் தேதி நடக்கிறது.திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கலாம். முன்னதாக தங்களது விபரங்களை இணையதளத்தில் (HTTPS://WWW.DCAT.IN) வரும், 27ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 9943440040 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் மேலாளர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
there is no provision for registration in given website. the mobile number they shared also incoming blocked one. so there is no use of this news.