உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தப்பிய குற்றவாளி சிக்கினார்

போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தப்பிய குற்றவாளி சிக்கினார்

உடுமலை; மடத்துக்குளம் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து தப்பிய குற்றவாளியை, போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிருஷ்ணாபுரத்தில், எலக்ட்ரீசியன் மோகன்குமார் என்பவர் வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை, கடந்த 12ம் தேதி திருடி சென்ற, மடத்துக்குளம், நஞ்சையம்பிள்ளைபுதுாரை சேர்ந்த முருகானந்தம்,23, என்பவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறைக்கு அனுப்ப போலீசார் ஆவணங்கள் தயார் செய்து கொண்டிருந்த நிலையில், அன்று இரவு, போலீசார் எதிர்பார்க்காத நிலையில், ஸ்டேஷனிலிருந்து பின்பக்கம் கம்பி வேலி ஏறி தப்பி ஓடினார்.இரு நாட்களாக தனிப்படைகள் அமைத்து, போலீசார் தேடி வந்த நிலையில், பூளவாடியில் பதுங்கியிருந்தவரை, இன்ஸ்பெக்டர் அருள் தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.போலீசார் கூறுகையில், 'முருகானந்தம் மீது, பல்வேறு ஸ்டேஷன்களில், 15க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. 8 மாதம் சிறையில் இருந்து விட்டு, கடந்த, டிச., மாதம் ஜாமினில் வந்துள்ளார்.மீண்டும் பைக் திருடி சிக்கியதால், மீண்டும் சிறைக்கு சென்றால் வெளியே வர முடியாது என கருதி, தப்பியதாக தெரிவித்தார். கைது செய்யப்பட்ட அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து விட்டோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி