உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  சைபர் மோசடி கும்பல் சிக்கியது;  35 போன் பறிமுதல்

 சைபர் மோசடி கும்பல் சிக்கியது;  35 போன் பறிமுதல்

திருப்பூர்: திருப்பூர் முத்தணம்பாளையம், ஆகாஷ் நகரை சேர்ந்தவர் சந்தனகருப்பன், 30. சமூக வலைதளத்தில் விளம்பரத்தை பார்த்து அதிலிருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டார். எதிர் முனையில் தன்னை மேலாளர் என ஒருவர் அறிமுகப்படுத்தி பேசினார். பல்வேறு தவணைகளாக, இவரிடம் இருந்து 53 ஆயிரம் ரூபாயை ஏமாற்றி பெற்றார். ஏமாற்றப்பட்டதை அறிந்து, திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். சைபர் கிரைம் எஸ்.ஐ.,கள் சையத் ரபீக் சிக்கந்தர், கனகவள்ளி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மும்பையில் இருந்து கும்பல் செயல்பட்டது தெரிந்தது. அங்கு சென்ற போலீசார், பிரதீப், 40, கிருஷ்ணன், 29, சக்திவேல், 31, சந்தோஷ், 23, பிரபாகரன், 28, மணிகண்டன், 23, விஷ்ணு பாரத், 29, சங்கர், 30, விக்னேஷ், 28, கோகுல் கண்ணன், 27, விக்னேஷ், 26, அருண்குமார், 26, முருகேசன், 48 என, 13 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 35 மொபைல் போன், 80 சிம் கார்டு, 20 ஏ.டி.எம். கார்டு, வங்கி புத்தகம், 17 சிம் கார்டு கவர்கள், மெமரி கார்டு மற்றும் இரண்டு வைபைய் ரூட்டர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை