அவிநாசி கோவில் தெப்பக்குளத்தில் கொத்துக்கொத்தாக இறந்த மீன்கள்
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் மீன்கள் கொத்துக்கொத்தாக செத்து மிதந்தன.திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், தெப்பக்குளம், மழை காரணமாக நிரம்பியுள்ளது.நேற்று காலை தெப்பக்குளத்தில் துர்நாற்றம் வீசியது. பக்தர்கள் பார்த்தபோது, நுாற்றுக்கணக்கான மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதந்தன. பக்தர்கள் கூறுகையில், ''இந்தாண்டு மட்டும் மூன்றாவது முறையாக இவ்வாறு மீன்கள் செத்து மிதக்கின்றன. தெப்பக்குளத்தில் இருந்த வாத்துகளும் கடந்த இரு மாதங்கள் முன் இறந்தன. கோவில் நிர்வாகத்தினர் தெப்பக்குளத்தை முறையாக பராமரிக்க வேண்டும்'' என்றனர்.