உயிருடன் இறந்த வாக்காளர்கள்: பட்டியலில் குளறுபடி
திருப்பூர்: வரைவுப்பட்டியலிலும், இறந்த வாக்காளர், இரட்டைப்பதிவு வாக்காளர் விவரம் இருப்பதால், அவற்றை நிரந்தரமாக நீக்க நட-வடிக்கை எடுக்க வேண்டுமென, கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தி-யுள்ளனர்.திருப்பூர் மாவட்ட சிறப்பு வரைவு வாக்காளர் பட்டியல் பார்வை-யாளர் கோவிந்த ராவ், நேற்று, கலெக்டர் மனிஷ் நாரணவரே முன்னிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.தேர்தல் கமிஷன் வழிகாட்டுதலின்படி, மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடந்து வருகிறது. வாக்காளர் வசதிக்காக, இன்றும், நாளையும், ஜன. 3 மற்றும் 4ம் தேதிகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. வாக்காளர் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், திருத்தம் கோரி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி மற்றும் சிறப்பு முகாம் குறித்து, அரசியல் கட்சியினருடன் பார்வையாளர் கலந்தாலோ-சனை நடத்தினார்.முன்னதாக, திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட வெள்ளியங்-காடு ஓட்டுச்சாவடி மையத்தை பார்வையிட்டார். தொடர்ந்து, கரட்டாங்காடு பகுதிகளில், இறந்த வாக்காளர் மற்றும் இடம்பெ-யர்ந்த வாக்காளர்கள் குறித்து கள ஆய்வு நடத்தினார். ஆய்வின் போது, மாநகராட்சி கமிஷனர் அமித், டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கமித்-திரை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) புஷ்பாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், வாக்காளர் பட்-டியல் சரிபார்ப்பு தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.600 ஓட்டுக்கு ஒரு சாவடிவடிவேல் (இந்திய கம்யூ.): திருப்பூர் மாவட்டத்தில், 5.50 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்; 21 ஆயிரம் பேருக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுப்பதாக கூறப்பட்டுள்ளது. வீடு வீடாக செல்லா-ததால், பெயர் நீக்கம் சரியாக நடக்கவில்லை. தற்போது, 400 முதல், 600 ஓட்டுக்கு ஒரு சாவடி என்று உள்ளது. இறந்த வாக்-காளர், இரட்டைப்பதிவு மீண்டும் பெயர் சேர்ந்துள்ளது. நோட்டீஸ் கொடுக்க வேண்டிய வாக்காளருக்கு சரியாக வழங்கி, உரிய ஆவணங்களை பெற்று முறைப்படுத்த வேண்டும். கடந்த காலங்களில் வரைவு பட்டியல் வெளியிட்டால், அரசியல் கட்சி-யினர் பார்த்து, இறுதி பட்டியல் வெளியிடுவது வழக்கம். தற்-போது, பெயர் சேர்ப்பு, நீக்கம் கோரும் விண்ணப்ப படிவங்கள் மீதான நடவடிக்கை குறித்து அறிய, கட்சியினருக்கு வழிகாட்ட வேண்டும்.'ஆதார்' ஆதாரமாக ஏற்க வேண்டும்நந்தகோபால் (மா.கம்யூ.): இறந்த வாக்காளர் பெயர், பெரும்பா-லான பூத்களில் நீக்கப்படாமல் இருக்கிறது. இரட்டைப்பதிவு வாக்காளர் பெயரும் உள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த வாக்-காளர், வெவ்வேறு 'பூத்'களில் சேர்க்கப்பட்டுள்ளனர்.ஆதார் கார்டு, 'படிவம் - 6'க்கு விண்ணப்பிக்க ஆதாரமாக ஏற்க வேண்டும் என்றோம்; இயலாது என்கின்றனர். அரசு ஆவணமா-கிய ஆதாரை ஏற்க வேண்டும். கையில் உள்ள ஆதாரத்தை வாங்-காமல், புதிததாக இருப்பிட சான்றிதழ் சான்று கோருவது முறை-யல்ல. 'ஆன்லைனில்' பெயர் சேர்க்க விண்ணப்பித்தால், சரியாக பதிவாவதில்லை.'நோட்டீஸ்' கொடுக்கப்படும் வாக்காளர் விவரம் வழங்க வேண்டும். சிறப்பு முகாமில், பட்டியல் பார்வைக்கு வைப்பது பயனளிக்காது. கட்சியினருக்கு, பட்டியலை வழங்க வேண்டும். தற்போது, புதிய வாக்காளர் பெயர் சேர்க்க விண்ணப்பித்தால், அவற்றை சரிபார்க்கும் வாய்ப்பு, அரசியல் கட்சி ஏஜன்டுகளுக்கு வழங்க வேண்டும். இல்லாதபட்சத்தில், தகுதியற்ற பெயர் சேரவும், தகுதியான பெயர் விடுபடவும் வாய்ப்புள்ளது. இறுதி பட்டியல் வெளியான பிறகு எதுவும் செய்ய முடியாது. முன்கூட்டியே சரிபார்க்க வாய்ப்பு வழங்க வேண்டும்.வாக்காளரை அலைக்கழிக்காதீர்கண்ணபிரான் (அ.தி.மு.க.): வரைவு பட்டியலில், இறந்த வாக்-காளர் மற்றும் இரட்டைப்பதிவு வாக்காளர் விவரம் முழுமையாக நீக்கப்படவில்லை; சில இடங்களில் மீண்டும் இடம்பெற்றுள்-ளது. 'நோட்டீஸ்' பெறும் வாக்காளர், அந்தந்த பி.எல்.ஓ., விடம் உரிய ஆவணங்களை வழங்க வேண்டும்; பிறகு விசாரணைக்கு அழைப்பார்கள்.வாக்காளர் பதிவு அலுவலர் விசாரித்து, சேர்க்க உத்தரவிடுவர். இதில், வாக்காளரை அலைக்கழிக்காமல், எளிதாக பணிகளை முடிக்க வேண்டும். குறைந்த பட்சம், 800 வாக்காளருக்கு ஒரு ஓட்டுச்சாவடி என்று பிரிக்கலாம்; இனி, வாக்காளர் எண்ணிக்கை திடீரென உயராது. கூடுதல் செலவு, வேலைப்பளு குறையும்.புதிய விண்ணப்ப விவரம் தேவை
பார்த்திபன் (தி.மு.க.): ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், 2,000 முதல் 3,000 நோட்டீஸ் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். இருப்பினும், நோட்டீஸ் வழங்கும் விவரத்தை கட்சிக்கு வழங்கவில்லை. அவ்வாறு வழங்கினால் மட்டுமே, நாங்களும் சரிபார்த்து, தேவை-யான ஆவணங்களை தயார்படுத்தி வைக்குமாறு வாக்காளருக்கு கூற முடியும். ஆதார் ஆவணத்தை ஏற்க வேண்டும். புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்வோர் விவரத்தை, கட்சிகளுக்கு வழங்கினால் மட்டுமே, தகுதியற்ற வாக்காளராக இருந்தால், ஆட்சேபனை தெரிவிக்க முடியும்.கோரிக்கை தொடர்பாக, ஒவ்வொரு கட்சியினரும் கடிதமாக வழங்கினால், உரிய மேல்நடவடிக்கை எடுக்கலாம் என, தேர்தல் பார்வையாளர் தெரிவித்தார்.