உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மணி மண்டபத்தில் கூடுதல் புத்தகங்கள் வைக்க தீர்மானம்

மணி மண்டபத்தில் கூடுதல் புத்தகங்கள் வைக்க தீர்மானம்

உடுமலை : நாராயண கவிமணி மண்டபத்தில், போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்களை வைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.உடுமலை நாராயண கவியின், 44வது நினைவு நாளையொட்டி, தளி ரோட்டில் அவரது பெயரில் அமைந்துள்ள, மணி மண்டபத்தில், நேற்று சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.உடுமலை நாராயணகவி இலக்கியப் பேரவையின் சார்பில் நடந்த நிகழ்வில், பேரவையின் தலைவர் அமிர்தநேயன் தலைமை வகித்தார்.நாராயண கவியின் பேரன் வக்கீல் திருப்பூர் சுந்தரராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மணிமண்டபத்தில் உள்ள நாராயண கவியின் சிலைக்கு, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.பேரவை நிர்வாகிகள், நுாலக வாசகர் வட்டத்தினர், உடுமலை தமிழிசை சங்கத்தினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, நடந்த ஆலோசனை கூட்டத்தில், வரும், செப்., 25ல் நாராயணகவியின் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.மேலும், நாராயணகவி மணிமண்டபத்தில் உள்ள நுாலகத்தில், போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்களை, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி