மேலும் செய்திகள்
தனபாலன் நகரில் இன்று குடிநீர் 'கட்'
21-Mar-2025
திருப்பூர்; தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மேற்கு மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் பரமசிவம் தலைமையில், திருப்பூர் பிள்ளையார் நகர், சேரன் நகர், பூங்கா நகர் பகுதி மக்கள், நேற்றைய குறைகேட்பு கூட்டத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜிடம் மனு அளித்தனர்.அப்பகுதியினர் கூறியதாவது:திருப்பூரின் பிரதான சாலைகளான தாராபுரம் ரோட்டையும், பல்லடம் ரோட்டையும் நேரடியாக இணைக்கும் முக்கிய வழியாக, கோவில்வழி - வீரபாண்டி ரோடுஉள்ளது. குடிநீர் குழாய் பதித்தல், கேபிள் பதிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வீரபாண்டி - கோவில் வழி ரோட்டின் ஒருபுறம் தோண்டப்பட்டது. மூன்று ஆண்டாகியும், ரோடு புதுப்பிக்காத நிலையில், ஒரு புரம் தார் சாலையாகவும், 2 கி.மீ., துாரத்துக்கு ரோடு குண்டும், குழியுமாக மண் ரோடாக மாறியுள்ளது.இதனால், அடிக்கடி விபத்து நடப்பதால், அபாயகரமான சாலையாக மாறிவிட்டது. ரோட்டை சீரமைக்க வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், வரும், 26ம் தேதி பாடை கட்டும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. குபேரன் பிள்ளையார் நகர், புது பிள்ளையார் நகர், சக்தி நகர், சேரன் நகர், மணிகண்டன் நகர், அழகாபுரி நகர், பூங்கா நகர், வசந்தம் நகர் பகுதிகளில், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். பஸ் வசதி இல்லாததால், பள்ளி மாணவ, மாணவியர், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், ஒரு கி.மீ, முதல் 3 கி.மீ., துாரத்துக்கு நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.
21-Mar-2025