10 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த முடிவு; திருப்பூர் நிம்மதி
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு, பிரதான ரோடுகள் என, பல இடங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். நாய்களின் அச்சுறுத்தல் காரணமாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தரப்பில் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஒவ்வொரு மாநகராட்சி கூட்டத்தில், கவுன்சிலர்களும் தங்கள் பகுதியில் உள்ள தெருநாய் பிரச்னை குறித்து தெரிவித்து வருகின்றனர்.இச்சூழலில், தெருநாய்களை கட்டுப்படுத்தும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் தற்போது கருத்தடை தடுப்பூசி செலுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.முதல் கட்டமாக, பத்தாயிரம் தெருநாய்களுக்கு கருத்தடை தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளனர்.ஒரு வார்டுக்கு, இரண்டு நாட்கள் விதம் செலவிட்டு தெருநாய்ளுக்கு தடுப்பூசி செலுத்த உள்ளனர். இதனால், 'ரேபிஸ்' நோய் தொற்றும் ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.