உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலை கட்டமைப்பில் குறை; கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

சாலை கட்டமைப்பில் குறை; கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

திருப்பூர்; காங்கயம் முதல் வெள்ளகோவில் வரை, பி.ஏ.பி., கால்வாயின் குறுக்கே மதகு, சுவர் அமைப்பில் உள்ள குறைபாடுகள் குறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.கோவை - கரூர் இடையே தேசிய நெடுஞ்சாலை, 81 விரிவாக்கப்பணி, 230 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், காங்கயம் - வெள்ளகோவில் இடைப்பட்ட பகுதியில், பி.ஏ.பி., மற்றும் நெடுஞ்சாலை சார்பில் அமைக்கப்பட்ட பாலங்களில் உயர குறைபாடு, கால்வாய் அடைப்பு ஏற்படுவது, சாலையின் கீழ் உள்ள வாய்க்கால் பாலம் கட்டுமானப் பணியில் உள்ள குறைபாடு, சாலையின் மீது கிணறுகள் இருப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக, பி.ஏ.பி., பாசன நீரை பயன்படுத்துவோர் சங்க தலைவர் வேலுசாமி, தேசிய நெடுஞ்சாலை ஆணைய உயரதிகாரிகளுக்கு மனு அனுப்பியிருந்தார்.அதன் தொடர்ச்சியாக, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், புகார் கூறப்பட்ட இடங்களில் இரு கட்ட ஆய்வு மேற்கொண்டனர். நேற்று முன்தினம், தேசிய நெடுஞ்சாலை ஆணைய கண்காணிப்பு பொறியாளர் தட்சிணாமூர்த்தி, ஆய்வு மேற்கொண்டார்.சாலையில் உள்ள குறைகள் குறித்து, பி.ஏ.பி., நீரை பயன்படுத்துவோர் சங்கத்தினர் விளக்கினர். அவருடன், 20 பொறியாளர்களும் இருந்தனர். ஆய்வின் முடிவில், குறைகள் அனைத் தும் சரி செய்யப்படும் என, கண்காணிப்பு பொறியாளர் தட்சிணாமூர்த்தி உறுதியளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !