உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு கேபிள் சிக்னல் வழங்குவதில் தாமதம்

அரசு கேபிள் சிக்னல் வழங்குவதில் தாமதம்

திருப்பூரை சேர்ந்த மணிவேல் என்பவருக்கு, கந்தம்பாளையம், வேலாயுதம்பாளையம், கருணைபாளையம், கருமத்தம்பட்டி பகுதிகளில் அரசு கேபிள் இணைப்பு வழங்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், மணிவேல் உள்பட நான்கு பேர் பங்கேற்று, மனு அளித்தனர். மணி வேல் கூறியதாவது:அரசு கேபிள் நிறுவனம் வழங்கிய உரிமம் அடிப்படையில், திருப்பூர் முதல் கருமத்தப்பட்டி வரை, 6 லட்சம் ரூபாய் செலவில் கேபிள் கொண்டுசென்றுள்ளேன். அதிகாரிகள் கூறியபடி, 1.50 லட்சம் செலுத்தி, 300 அரசு செட்டாப் பாக்ஸ்களையும் பெற்றுள்ளேன்.தனியாருக்கு மாறிய ஆபரேட்டர்கள் சிலர், அரசு கேபிள் இணைப்பு வழங்கவிடாமல் தடுக்கின்றனர். அரசு கேபிள் விரிவாக்கத்துக்காக பணிபுரியவேண்டிய அதிகாரியோ, தனியார் கேபிள் ஆபரேட்டர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்.இதுதொடர்பாக அளிக்கப்பட்ட மனுவை தொடர்ந்து விசாரணை நடத்திய கலெக்டர், எனக்கு அரசு கேபிள் சிக்னல் வழங்க வேண்டும் என, உத்தரவிட்டார். கூட்டத்தில், 'சரி' என்று கூறிய அரசு கேபிள் தாசில்தார் முரளி, பத்து நாட்களாகியும் சிக்னல் வழங்காமல் இழுத்தடிக்கிறார். இதுகுறித்து கேட்டால், எங்களை அலட்சியப்படுத்துகிறார்.அரசு கேபிளில் இருந்து தனியாருக்கு மாறிய ஆப்பரேட்டர்களை மிரட்டுவதற்காக, என்னைப்போன்ற புதியவர்களை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர். மாவட்டத்தில் அரசு கேபிளின் வளர்ச்சி முடங்குகிறது; மக்களுக்கு, மாத கட்டணத்தில், கேபிள் இணைப்பு கிடைக்காமல் போகிறது. கோர்ட்டில் ரிட் மனுவும் தாக்கல் செய்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தகட்டமாக தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை