உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிநீர் வினியோகம் தாமதம் ஊராட்சி அலுவலகம் முற்றுகை

குடிநீர் வினியோகம் தாமதம் ஊராட்சி அலுவலகம் முற்றுகை

அனுப்பர்பாளையம் : திருப்பூர் ஒன்றியம், பெருமாநல்லுார் ஊராட்சி, 6வது வார்ட பாரதியார் நகர், ஏ.டி., காலனி பகுதியில் அதிகளவில் வீடுகள் உள்ளன.இப்பகுதிக்கு குடிநீர் மற்றும் உப்பு தண்ணீர் வாரத்திற்கு ஒரு முறையே வினியோகம் செய்யப்படுகிறது.இதனால், போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். சீரான குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி, முன்னாள் ஊராட்சி தலைவர் நந்து வேலுசாமி, தலைமையில் நேற்று காலை ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) வேலுசாமி, குடிநீர் சீராக வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். அதனை தொடர்ந்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ