உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திறமையை நிரூபியுங்கள்; கருத்தரங்கில் அறிவுறுத்தல்

திறமையை நிரூபியுங்கள்; கருத்தரங்கில் அறிவுறுத்தல்

பல்லடம்; பல்லடத்தில், ஹிந்து முன்னணி ஊழியர் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அண்ணாதுரை வரவேற்றார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் செந்தில், திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் சர்வேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்துக்கு தலைமை வகித்த மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசியதாவது:நாம் நல்ல பேச்சாளராக வேண்டும். பாடல் பாட வேண்டும். இதற்கெல்லாம் சிறந்த பயிற்சி வேண்டும். உங்களுக்குள் என்ன திறமை உள்ளது என்பதை நீங்கள்தான் நிருபிக்க வேண்டும்.அரசியல் மாதிரி இதில் போட்டியெல்லாம் கிடையாது. நாம் ஒன்றும் தேர்தலில் நின்று கவுன்சிலராகப் போவதில்லை. இளைஞர்களை சீரழித்து வரும் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுத்தாக வேண்டும். அரசியல் கட்சிகளின் நோக்கமே இளைஞர்களை போதைக்கு அடிமையாக்குவதுதான்.ஆனால், நாம் இதிலிருந்து மாறுபட்டு, நமது நாட்டை வல்லரசாக்க முயற்சிக்க வேண்டும். அன்று, சென்னிமலையை கிறிஸ்தவ மலையாக மாற்றுவேன் என்று கிளம்பினார்கள். இன்று, திருப்பரங்குன்றத்தை இஸ்லாமிய மலையாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.சென்னிமலையில், ஹிந்துக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தி மாற்று மதத்தினரின் சூழ்ச்சியை தடுத்து நிறுத்தினோம் அதுபோல், அடுத்தடுத்து வரும் இதுபோன்ற போராட்டங்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !