உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குமுதா பள்ளி மாணவிக்கு துணை முதல்வர் பாராட்டு

குமுதா பள்ளி மாணவிக்கு துணை முதல்வர் பாராட்டு

திருப்பூர்; தேசிய அளவில் விளையாட்டு போட்டியில் அசத்திய குமுதா பள்ளி மாணவியை, துணை முதல்வர் உதயநிதி பாராட்டினார். சர்வதேச, தேசிய, மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பதக்கம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. தேசிய மற்றும் மாநில அளவில் பீச் வாலிபால் மற்றும் வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற குமுதா பள்ளி மாணவி யோகிஸ்ரீயை துணை முதல்வர் உதயநிதி பாராட்டி சான்றிதழ் வழங்கினார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர், மாநில பெற்றோர் ஆசிரியர் துணை தலைவர், பள்ளிகல்வி மற்றும் தனியார் பள்ளி இயக்கக இயக்குனர்கள் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவியை பாராட்டினர். பாராட்டு பெற்று பள்ளிக்கு வந்த யோகிஸ்ரீக்கு பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், செயலர் அரவிந்தன், இணை செயலர் மாலினி, விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, பள்ளி முதல்வர் மஞ்சுளா ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை