உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.48.33 லட்சத்தில் வளர்ச்சி பணி

ரூ.48.33 லட்சத்தில் வளர்ச்சி பணி

அனுப்பர்பாளையம் : திருப்பூர் ஒன்றியம், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி எஸ்.எஸ்., நகரில் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து 21.29 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் ரோடு அமைத்தல்; லட்சுமி கார்டன் பகுதியில் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பில் பைப் லைன் அமைத்தல்.வீதிக்காடு பகுதியில், 2 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது. இவற்றுக்கான பூமி பூஜை நடைபெற்றது. எம்.எல்.ஏ., விஜயகுமார் பணிகளை துவக்கி வைத்தார்.மாவட்ட கவுன்சிலர்கள் சாமிநாதன், கண்ணம்மாள், ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்யா மஹராஜ், ஊராட்சி தலைவர்கள் ராதாமணி, சுகன்யா, துணை தலைவர் ராஜாமணி, ஒன்றிய குழு முன்னாள் தலைவர் நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, காளிபாளையம் ஊராட்சி, எஸ்.எஸ்., நகரில், கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை எம்.எல்.ஏ விஜய குமார், திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ