உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவிநாசி கோவிலில் பக்தர்கள் அலைமோதல்

அவிநாசி கோவிலில் பக்தர்கள் அலைமோதல்

அவிநாசி : தீபாவளியையொட்டி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் குடும்பத்தினருடன் தரிசனம் செய்வதற்காக பல ஊர்களில் இருந்து பக்தர்கள் காலை முதலே வரத் தொடங்கினர்.கோவில் உள்பிரகாரத்தில் அம்மன் கோவில் வரை நீண்ட பக்தர்களின் வரிசை, பிறகு வளைந்து மீண்டும் சபா மண்டபம் வரை நீடித்தது.நேற்று காலை முதலே வெயில் சுட்டெரித்தது.பக்தர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேல் கால் கடுக்க வெயிலில் நின்று தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் கார்கள் நிறுத்தும் இடத்தில் கோவில் நிர்வாக தரப்பிலோ வாகன நிறுத்த ஏலம் எடுத்த தரப்பிலோ வாகனங்களை முறைப்படுத்தி நிறுத்த கண்காணிப்பில் ஈடுபடவில்லை.கார்களில் வந்தவர்கள் அவரவர் சவுகரியம் போல கார்களை நிறுத்தியிருந்தனர்.வெளியில் இருந்து வரும் வாகனங்களும், தரிசனம் முடித்து கோவிலில் இருந்து வெளியேறும் பக்தர்களின் வாகனங்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகின. காத்திருக்கக் கூடிய சூழல் ஏற்பட்டது.பக்தர்கள் கூறுகையில், 'விசேஷம் மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் ஏராளமானோர் வருகின்றனர்.அதை மனதில் கொண்டு கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கான வசதியை செய்து தர வேண்டும்.குடிநீர் வசதி கூடுதலாக்க வேண்டும்; நிழல் ஏற்படுத்தும் வகையில் வசதி தேவை. கோவில் வெளிவளாகத்தில் வாகனங்களை நிறுத்தாமல் கோவிலுக்கு சொந்தமான அருகில் உள்ள பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Avinashi Lingam
நவ 01, 2024 21:33

கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் வரை யாரிடமும் சொன்னால் மேல் இடத்திலிருந்து தகவல் சொல்லியுள்ளோம் அவர்கள் சொன்னவுடன் செய்து தருகிறோம் என்று தான் சொல்வார்கள் திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி பெரிய கோயில் பல வகைகளில் அரசுக்கு வருமானம் தருகின்றது ஆனால் பக்தர்கள் நிற்பதற்கு நிழல் கூடாரங்களை அமைக்க காசு இல்லை என்பார்கள் திருமணம் நிகழ்ச்சிகள் நிச்சயம் செய்து வைத்தல் ஆகியவற்றில் பணம் வசூல் செய்வதையே குறிக்கோளாக வைத்திருப்பார்கள் கோவிலுக்கு தேவையான அனைத்து வசதிகளும் பெரும்பாலும் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்து விடுகிறார்கள் கும்பாபிஷேகம் அன்று இந்த பிரச்சனை ஏற்பட்டது விசேஷ நாட்களில் வரும் பொழுது தயார்படுத்தி வைத்திருக்க வேண்டும் அலுவலர்களுக்கு ஒரு நாள் ஒரு மணி நேரம் அந்த வெயிலில் வேலை செய்தால் பிறகு நிழல் அமைப்புகளை தானாக ஏற்படுத்தி தருவார்கள் அவிநாசி அவிநாசி லிங்கம்


Avinashi Lingam
நவ 01, 2024 21:09

அவிநாசி கும்பாபிஷேகம் முதல் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமானால் வெயிலில் நின்று தான் ஆக வேண்டும் பல வகைகளில் வசூல் செய்வார்கள் யாரும் கேட்க முடியாது ஆனால் பக்தர்களுக்கு செலவு செய்ய வேண்டுமெனில் நிதி இல்லை என்று சொல்லிவிடுவார்கள் திருக்கோவிலில் நடக்கும் திருமணங்கள் எவ்வளவு வசூலிக்கிறார்கள் என எனக்கு தெரியாது திருப்பூர் மாவட்டத்திலேயே அவிநாசி அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் பல வகைகளில் அரசுக்கு வருமானம் தருகின்றது கோவிலுக்கு உண்டான செலவினங்கள் இங்கு உள்ள பெரிய மனது படைத்த பக்தர்கள் வசதியானவர்கள் ஏகப்பட்ட சேவைகளை செய்து வருகிறார்கள். ஆனால் அரசு கோவில் நிர்வாகம் பக்தர்கள் நிற்பதற்கு ஏன் நிரல் தர ஏற்பாடு செய்து தரவில்லை என்பது ஒரு பெரிய கேள்விக்குறி கும்பாபிஷேகம் அன்றே அதிகப்படியான பக்தர்கள் வெயிலில் நின்று தான் இறைவனை தரிசித்தார்கள் பிறகு தற்காலிகமாக நிழல் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன அடுத்த மாதம் ஐப்பசி கார்த்திகை முகூர்த்த நாள்களில் வசூல் செய்வதை முக்கியமான நோக்கமாகக் கொண்டிருப்பார்கள் அரசாங்க கட்டுப்பாட்டில் இருக்கும் வரை கோவில்கள் பக்தர்களுக்கு சேவை குறைவாகத்தான் இருக்கும் யாரையும் கேட்க முடியாது அவிநாசி அவிநாசி லிங்கம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை