உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீசத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா; நுாறு பஜன்கள் பாடிய பக்தர்கள்

ஸ்ரீசத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா; நுாறு பஜன்கள் பாடிய பக்தர்கள்

திருப்பூர்; ஸ்ரீசத்ய சாய்பாபாவின் நுாறாவது பிறந்த நாள் கொண்டாட்டத்தில், நுாறு பஜன்கள் பாடல்களை சாய் பக்தர்கள் பாடினர். ஸ்ரீசத்ய சாய்பாபாவின் நுாறாவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஷத வருஷ ஜென்மோத்சவம் என்ற தலைப்பில் அனைத்துப் பகுதியிலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து சாய் பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். திருப்பூர் மாவட்ட ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனம் சார்பில் நுாறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டு, தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு நிகழ்வாக நேற்று திருப்பூர் பி.என். ரோடு மையத்தில் நுாறு பஜன் நிகழ்வு நடந்தது. முன்னதாக வேத பாராயணம் நடந்தது. தொடர்ந்து இளைஞர்கள் 100 பஜன் பாடல்களை பாடினர். அதன் பின்னர் மங்கள ஆரத்தி நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை