உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ராமசாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம்

ராமசாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம்

திருப்பூர்:பொங்கலுார் ஒன்றியம், கோவில்பாளையத்தில் உள்ள ராமசாமி கோவில் சுயம்புவாக உருவானது. பழமையான இக்கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிகின்றனர். பக்தர்களின் வசதிக்காக, பல இடங்களில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று கடைசி சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அவிநாசி பாளையம் போலீசார் புறக்காவல் நிலையம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியும், பொங்கல் வைத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை