மன நிறைவு தந்ததா மக்கள் பணி? மனம் திறந்த ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகள்
ரவிச்சந்திரன், தலைவர், பெருந்தொழுவு ஊராட்சிதுவக்கத்தில், 2 ஆயிரம் மக்கள் தொகை இருந்த ஊராட்சியில், தற்போது, 5 ஆயிம் பேர் வசிக்கின்றனர். குடிநீர் பிரச்னை ஓரளவு தீர்க்கப்பட்டிருக்கிறது. தெரு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இருப்பினும், அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்ட நீர், புதிய குடியிருப்பு பகுதிகளுக்கு வரவில்லை. புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகம் சார்பில் குடிநீரை கொண்டு வரும் முயற்சி கைகூடவில்லை என்ற ஆதங்கம் இருக்கிறது.- நமது நிருபர் -திருப்பூர் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம், வரும் ஜன., 5ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. தங்கள் பணிக்காலத்தில், கிராம மக்களின் அடிப்படை தேவைகள் தன்னிறைவாகியுள்ளனவா... மக்களுக்கு சேவைபுரிந்த மனநிறைவுடன் பதவிக்காலத்தை நிறைவு செய்கிறீர்களா என்ற கேள்விக்கு, உள்ளாட்சிப்பிரதிநிதிகள் நம்முடன் பகிர்ந்த கருத்துகள்:---சுதந்திரம் இல்லைபாலசுப்ரமணியம், துணைத்தலைவர், பல்லடம் ஊராட்சி ஒன்றியம்:இயன்றவரை மக்களுக்குத் தேவையான பல பணிகளைச் செய்து கொடுத்திருக்கிறேன். திடக்கழிவு மேலாண்மை பணி, ஊராட்சிகளுக்கு பெரும் சவால் நிறைந்ததாக மாறியிருக்கிறது. இனிவரும் கால கட்டங்களில், இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. கிராம ஊராட்சி நிர்வாகத்துக்கும், ஒன்றிய குழு நிர்வாகத்துக்கும் இடையேயான இடைவெளி குறைக்கப்பட வேண்டும். கிராம ஊராட்சி பணிகளில் ஒன்றியக்குழு நிர்வாகம் சுதந்திரமாக செயல்பட முடிவதில்லை. தேவையான நேரங்களில் தேவையான நிதி கிடைத்தால், மக்கள் நலன் சார்ந்த பணிகளை இன்னும் திறம்பட செய்து முடிக்க முடியும்.---சில பணிகள் திருப்திவேல்குமார் சாமிநாதன், கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி:பதவிக்காலத்தில், கிட்டத்தட்ட இரு ஆண்டுகள் கொரோனா காலம். அப்போது, மக்களுக்கு பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. கடந்த ஐந்தாண்டில், கடைக்கோடி கிராமத்தில் உள்ள பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட சில பணிகளை செய்தது திருப்தியளிக்கிறது. குடிநீர் பிரச்னை ஓரளவு தீர்க்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், பெரும்பாலான கிராமங்களில் அடிப்படை வசதிகள் பூர்த்தியாக வேண்டியிருக்கிறது. குறிப்பாக, கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை தோல்வியடைந்திருக்கிறது; வீதி, தெருவோரமெங்கும் குப்பை குவியலாக இருக்கிறது. ஊராட்சிகள் தோறும் 'இன்ஸினரேட்டர்' உபகரணம் பொருத்தி, அதன் வாயிலாக குப்பைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றேன்; எந்த முன்னேற்றமும் இல்லை. குப்பைப் பிரச்னை நிச்சயம் தீர்க்கப்பட வேண்டும்.---சவாலான பணிபிரசாத்குமார், தலைவர்(பொறுப்பு), அவிநாசி ஊராட்சி ஒன்றியம்:எனது ஒன்றிய வார்டில் பாலம், சாலை, கழிவுநீர் கால்வாய், உறிஞ்சுகுழி உள்ளிட்ட பணிகள் செய்து கொடுத்துள்ளேன்; இது, திருப்தியளிக்கிறது. தனி நபர் கழிப்பறை திட்டம் அமலில் இருந்து, சில கிராமப்புறங்களில் இத்திட்டம் முழுமை பெறவில்லை. அதேபோல், ஏழை, எளியோருக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தில், ஏற்கனவே, வீடு வைத்துள்ள, சற்றே வசதியானவர்கள் பயன் பெறுகின்றனர்; அவர்கள் செல்வாக்கை பயன்படுத்தி அரசின் அடுக்குமாடி குடியிருப்புகளை கூட வாங்கிக் கொள்கின்றனர். உண்மையான பயனாளிகளுக்கு வீடுகள் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். கிராம ஊராட்சிகளில் குப்பைகளை அகற்றுவது என்பது, சவால் நிறைந்த பணியாக மாறி விட்டது.---நீங்காத ஆதங்கம்ரவிச்சந்திரன், தலைவர்,பெருந்தொழுவு ஊராட்சிதுவக்கத்தில், 2 ஆயிரம் மக்கள் தொகை இருந்த ஊராட்சியில், தற்போது, 5 ஆயிம் பேர் வசிக்கின்றனர். குடிநீர் பிரச்னை ஓரளவு தீர்க்கப்பட்டிருக்கிறது. தெரு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இருப்பினும், அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்ட நீர், புதிய குடியிருப்பு பகுதிகளுக்கு வரவில்லை. புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகம் சார்பில் குடிநீரை கொண்டு வரும் முயற்சி கைகூடவில்லை என்ற ஆதங்கம் இருக்கிறது.---