உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிதிலமடைந்த ரயில்வே சுரங்க பாலம் ஓடு தளம்

சிதிலமடைந்த ரயில்வே சுரங்க பாலம் ஓடு தளம்

உடுமலை; உடுமலை தளி ரோடு ரயில்வே சுரங்க பாலம் ஓடுதளம் சேதமடைந்துள்ளதால், விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.உடுமலையிலிருந்து, அமராவதி, திருமூர்த்தி மற்றும் மூணாறு செல்லும் பிரதான வழித்தடமாக தளி ரோடு அமைந்துள்ளது.தளி ரோட்டில், ரயில்வே வழித்தடத்தை கடக்க அமைக்கப்பட்டுள்ள சுரங்க பாலத்தில், மழை காலத்தில் அதிகளவு நீர் தேங்குவதால், போக்குவரத்து பாதித்து வருகிறது. தொடர்ந்து, நீர் தேங்குவதால், பாலத்தின் ஓடு தளம் குண்டும், குழியுமாக மாறியுள்ளது.இதில், மழை நீரும் தேங்கியுள்ளதால், குழி தெரியாமல், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகி வரும் சம்பவங்கள் நடந்து வருகிறது.எனவே, ரயில்வே சுரங்க பாலத்தில் ஓடு தளத்தை சீரமைக்கவும், ஓடு தளத்தில் நீர் தேங்காமல் இருக்க, அமைக்கப்பட்டுள்ள நீர் சேகரிப்பு கிணற்றை பராமரித்து, மழை காலங்களில் கிணற்றிலிருந்து நீரை வெளியேற்றவும், நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி