உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிதிலமடைந்த பள்ளி நுழைவாயில் தளம் கேள்விக்குறியாகும் மாணவர் பாதுகாப்பு

சிதிலமடைந்த பள்ளி நுழைவாயில் தளம் கேள்விக்குறியாகும் மாணவர் பாதுகாப்பு

உடுமலை: உடுமலை ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப்பள்ளியில், நுழைவாயில் தரைதளம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.உடுமலை ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப்பள்ளியில், நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி வளாகத்தில் தான் வட்டார கல்வி அலுவலகமும் செயல்படுகிறது.பள்ளியின் நுழைவாயில் முன்பு கழிவுநீர் கால்வாய் உள்ளது. இதன் மீது தரைதளம் அமைக்கப்பட்டு, பள்ளிக்கான வழியாக பயன்படுத்தி வந்தனர். கடந்த சில நாட்களாக, பள்ளிக்குள் நுழைவதற்கான தரைதளம் சிதிலமடைந்து சாக்கடை கால்வாய் திறந்த நிலையில் உள்ளது.இதனால் மாணவர்கள் பள்ளிக்குள் செல்வதற்கு குதித்து செல்வது, பாதி பழுதடைந்த நிலையில் இருக்கும் தரைதளத்தின் மீது கால்வைத்து செல்வதுமாக உள்ளனர். ஆசிரியர்களும் பள்ளிக்குள் நுழைவதற்குள் ஒருவழியாகி விடுகின்றனர்.ஆறாம் வகுப்பு முதல் இப்பள்ளியில் மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி மாணவர்கள் எந்த நேரத்திலும் தடுமாறி விழும் வகையில் தான் கால்வாய் உள்ளது. மேலும், ஆசிரியர்களில் சிலர் வயது முதிர்ந்தவர்களாக இருக்கின்றனர்.அவர்களும் சாக்கடை கால்வாயை கடந்து பள்ளிக்குள் நுழைவதற்கு அவதிப்படுகின்றனர். சிதிலமடைந்துள்ள கற்களை அப்புறப்படுத்தி, விரைவில் பள்ளிக்கு செல்வதற்கான வழியை உறுதியான தரைதளமாக போடுவதற்கு, கல்வித்துறை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ