உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தினமலர்-பட்டம் வினாடி-வினா போட்டி; நேஷனல் மாடல் பள்ளி மாணவர்கள் அசத்தல்

தினமலர்-பட்டம் வினாடி-வினா போட்டி; நேஷனல் மாடல் பள்ளி மாணவர்கள் அசத்தல்

உடுமலை; 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற மெகா வினாடி - வினா போட்டி, கோட்டமங்கலம் நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில் நடந்தது.பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வுத்திறன், கணிதம், மொழித்திறனை ஊக்குவிக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு, 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது.திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை, பட்டம் இதழ் நாள்தோறும் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. இதை வாசிக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தவும், அவர்களின் கற்றல் சார்ந்த தேடலை மேம்படுத்தும் வகையில், கடந்த 2018 முதல் 'மெகா வினாடி - வினா' போட்டி நடத்தப்படுகிறது.நடப்பாண்டுக்கான வினாடி - வினா போட்டி, 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், கோட்டமங்கலம் நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில் நடந்தது. எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது. 'கோ- ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சி உள்ளது.நேற்று பள்ளியில் நடந்த இப்போட்டியில், முதல் சுற்றில், 100 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக புள்ளிகள் பெற்ற, 16 பேர் தேர்வு செய்யப்பட்டு, எட்டு அணிகளாக பிரித்து இறுதிச்சுற்று போட்டி நடந்தது.மூன்று கட்டங்களாக நடந்த போட்டியில், முதல் பரிசை 'பி' அணியை சேர்ந்த, ஒன்பதாம் வகுப்பு மாணவர் சக்தி, எட்டாம் வகுப்பைச்சேர்ந்த சிபி ஆகியோர் வென்றனர்.போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியரை, பள்ளி ஒருங்கிணைப்பாளர் மாலதி, பள்ளி முதல்வர் கவிதா, ஆசிரியர்கள் சவுந்தர்யா, கிருத்திகா, கவுசல்யா, புவனேஸ்வரி பாராட்டி, சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர்.முதலிடம் பிடிக்கும் மாணவர்கள், அரையிறுதியில் பங்கேற்பர். இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதிப்போட்டி நடத்தப்படும்.

அறிவு பெட்டகம்

பள்ளி முதல்வர் கவிதா கூறியதாவது: மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கத்தை பட்டம் இதழ் ஊக்குவிக்கிறது. அறிவியல், வரலாறு புதிய கண்டுபிடிப்புகள் என அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு அறிவு பெட்டகமாக திகழ்கிறது. அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.முதல் பக்கத்தின் வடிவமைப்பே அதிலுள்ள தகவல்களை அறிந்து கொள்வதற்கான ஆர்வத்தை துாண்டுகிறது. பள்ளியில் நடக்கும் பொது அறிவு சார்ந்த போட்டிகளுக்கும் மாணவர்கள் பட்டம் இதழைத்தான் பயன்படுத்தி தயாராகின்றனர்.இது போன்ற வினாடி வினா போட்டிகள் வாயிலாக, மாணவர்களின் அறிவு, சிந்தனை திறன் மேம்படுகிறது. பல்வேறு திறமைகளை அவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.

சிந்திக்க வைக்கிறது

மாணவர் சக்தி: பட்டம் இதழ் வாசிப்பதற்கு மிகவும் எளிமையாக உள்ளது. மேல்நிலை வகுப்புகள் மட்டுமில்லாமல், அனைத்து வகுப்பினரும் படிக்கும் வகையில் தான் தகவல்கள் அதில் வழங்கப்பட்டுள்ளன. இதில் எங்களுக்கு புதிய அனுபவம் கிடைக்கிறது. பாடப்புத்தகத்தில் இல்லாத பல அரிய தகவல்கள் இதில் இருப்பதால், ஒவ்வொரு முறையும் புதிதாக படிப்பதை போல் ஆர்வம் ஏற்படுகிறது.மாணவர் சிபி: பட்டம் இதழ் படிப்பதால் அறிவு சார்ந்த மற்ற போட்டிகளில் பங்கேற்பதற்கும் பயனுள்ளதாக உள்ளது. மேலும், பல விஷயங்களை தேடுவதற்கு துாண்டுகிறது. மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களும், அனைவரும் விரும்பி படிக்கின்றனர். இதில் நடத்தப்படும் வினாடிவினா போட்டியால், எங்களின் திறன்களை அறிந்து கொள்ள முடிகிறது. போட்டியில் வெற்றி பெற்று நிச்சயம் பரிசையும் வெல்வோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ