உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தானியங்கள் நேரடி கொள்முதல் தேவை

தானியங்கள் நேரடி கொள்முதல் தேவை

உடுமலை ; 'அறுவடை சீசனில், தானியம் மற்றும் பயறு வகைகளை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய மையம் அமைக்க வேண்டும்,' என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், துவரை, உளுந்து, பாசிப்பயறு, கொள்ளு, கொண்டைக்கடலை, அவரை, தட்டை, மொச்சை என, பயறு வகை பயிர்கள், 20 ஆயிரம் ஏக்கருக்கும் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.இதில், மண் வள மேம்பாட்டுக்காகவும், தானிய தேவைக்காகவும், உளுந்து, அதிகளவில் சாகுபடியாகிறது. தொடர்ச்சியாக காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள், இடைப்பட்ட பருவத்தில், உளுந்து விதைக்கின்றனர்.கடந்த 2019ல், மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தின் கீழ், உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், அரசு உளுந்து கொள்முதல் மையம் அமைத்து, விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டது.எனவே வரும் சீசனிலும், உளுந்து உள்ளிட்ட தானியங்களையும், பயறு வகைகளையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும். இதனால், தானியங்களுக்கு நிலையான விலை கிடைக்கும் என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை