உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நோயற்ற வாழ்க்கை; யோகா உறுதுணை

நோயற்ற வாழ்க்கை; யோகா உறுதுணை

கையில் சிலம்பத்துடன், கோல்டன் நகர வீதிகளில் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்து, அங்குள்ள பள்ளி மைதானம் நோக்கி சென்றனர், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள். குடியிருப்புவாசிகள், பாதசாரிகளிடம் 'எல்லோரும் யோகா கத்துக்கோங்க. உடம்பும், மனசும் தெம்பாக இருக்கும்' என சொல்லவும் செய்தனர். 'அடடா... குழந்தைகளிடம் எத்தனை பெரிய ஆர்வம்...' பெற்றோர், பூரித்து போயினர்.முத்தமிழ் சிலம்ப பள்ளி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச யோகா தின நிகழ்ச்சியை முன்னிட்டு, சிலம்பம் கற்றுக்கொள்ளும் மாணவ, மாணவியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அங்குள்ள பள்ளி மைதானத்தில் குழுமிய அவர்கள், பல்வேறு ஆசனங்களை செய்து, பயிற்சி மேற்கொண்டனர். பெரும்பாலும் அரசு பள்ளி மாணவ, மாணவியரே பங்கெடுத்தனர்.

கவனச்சிதறல் மறையும்

சுமதி, யோகா பயிற்றுனர்: தற்போதைய சூழலில் மொபைல் போன், சமூக வலை தளங்களின் பிடியில் சிக்கி, மனச்சிதறலுக்கு ஆளாகும் மாணவ மற்றும் இளம் சமூகத்தினர், யோகா கலை பயில்வதன் வாயிலாக, அவர்களின் மனம் ஒருநிலைப்படும். தினமும், நம் உடலின் குறிப்பிட்ட சில பாகங்களுக்கு மட்டுமே அசைவு கொடுக்கிறோம். அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கினால் தான் உடல் ஆரோக்கியம் மேம்படும். இதற்கு தினசரி யோகா பயிற்சி செய்வதால், அனைத்து உறுப்புகளின் இயக்கமும் சீராக இருக்கும். நோயற்ற வாழ்வு பெற முடியும். தினமும் யோகா பயிற்சி செய்வதன் வாயிலாக, வயது குறைவாக தெரியும். நல்ல எண்ணங்களே அமைதியான வாழ்க்கைக்கு அடித்தளம் என்பதை, யோக கலை முழுமையாக வழங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை